தாய்ப் பாலுக்கு அப்புறம் இந்த வகை அரிசி - பருப்பு கஞ்சி பெஸ்ட்: மருத்துவர் சிவராமன்
குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து நாம் பழக்கப்படுத்த வேண்டிய சில உணவு வகைகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து நாம் பழக்கப்படுத்த வேண்டிய சில உணவு வகைகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து நோய் வராமல் தடுப்பதற்கு இயற்கையாகவே கொடுக்கக் கூடிய உணவுகளில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
உதாரணமாக, இரண்டு வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதன்பின்னர், தாய்ப்பாலுக்கு பிறகு அரிசி - பருப்பு கஞ்சி கொடுக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இதில் பல்வேறு சத்துகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கஞ்சியில் இரண்டு துளிகள் நெய் சேர்த்து கொடுக்கலாம்.
அதன் பின்னர், கேழ்வரகு பால் கஞ்சி, நேந்திரம் பழ மாவுக் கஞ்சி கொடுக்க ஆரம்பித்து படிப்படியாக கீரை சாதம் போன்றவற்றை கொடுக்கலாம். இதற்கு பின்னர் குழந்தைகளின் உடல் நலனை சீராக பராமரிக்க வேண்டும். குறிப்பாக, சிறுவயதிலும் கூட உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதன்படி பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் உடல் எடை அதிகமாக இருக்கும் குழந்தைகள் கட்டாயமாக பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இது தவிர புரதச் சத்தை அதிகமாகவும், கார்போஹைட்ரேட்டை குறைவாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ எடைக்கு 1 கிராம் புரதம் என்ற அடிப்படையில் நம் உணவு இருக்க வேண்டும். அதாவது, சுமார் 70 கிலோ எடை கொண்ட நபர் 70 கிராம் அளவிற்கு புரதத்தை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு புரதம் தான் உதவி செய்கிறது. எனவே, குழந்தை பருவத்தில் இருந்து புரதத்தை அவசியம் கொடுக்க வேண்டும். இதேபோல், தமிழகத்தில் சுமார் 45 சதவீதம் பெண்கள் இரத்த சோகையுடன் இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். எனவே, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளையும் சீரான அளவில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இதற்காக, அத்திப்பழம், மாதுளம் பழச்சாறு மற்றும் எள் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த சத்துகள் அனைத்தையும் குழந்தை பருவத்தில் இருந்து பழக்கப்படுத்த வேண்டும் என்று மருத்துவர் சிவராமன அறிவுறுத்துகிறார்.
நன்றி - Nalam Karuthi - Health Tips in Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.