சுகர் அறிகுறி இருந்தா இந்த சட்னி சாப்பிடுங்க; முழு நோயாளி ஆகாம தப்புங்க: அமெரிக்க பல்கலை ஆய்வு ரிசல்ட்
கறிவேப்பிலை சட்னியின் மகத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கறிவேப்பிலை சட்னி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதற்கான காப்புரிமையை அமெரிக்காவின் இலினொய் பல்கலைக்கழகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உருட்டு உளுந்து, காய்ந்த மிளகாய்கள், புளி, தேங்காய், உப்பு மற்றும் தண்ணீர்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கொத்து கறிவேப்பிலையை எடுத்து நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் உருட்டு உளுந்து ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பின்னர், 4 காய்ந்த மிளகாய்கள், சிறிதளவு புளி மற்றும் கழுவி வைத்திருந்த கறிவேப்பிலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இவற்றை மிக்ஸியில் போட்டு அத்துடன் அரை கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதையடுத்து, மிளகாயை தாளித்து இதன் மீது ஊற்றினால் சுவையான கறிவேப்பிலை சட்னி தயாராகி விடும்.
நன்றி - Ram Sivaritha Shorts Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.