/indian-express-tamil/media/media_files/2025/02/07/Mofe6Fy9P7pH7tjPGLxi.jpg)
உணவே மருந்து என வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி இருப்பதும் தமிழர்கள் தான். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் நம் உணவில் அவசியம் இருக்க வேண்டிய சிலவற்றை மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். அதனடிப்படையில், சர்க்கரை நோயை தடுப்பதில் கறிவேப்பிலை பெரும் பங்கு வகிக்கிறது. தாய், தந்தைக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை கறிவேப்பிலை குறைக்கிறது என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். இதற்காக சிகாகோ பல்கலைக்கழகம் காப்புரிமை வாங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீரைகள் மிகவும் அவசியமானது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதில் இருக்கும் சிறிய வகையிலான கனிமங்கள் மற்றும் உப்புகள் வேறு எந்த உணவிலும் காணப்படுவதில்லை. அதில் இருக்கும் ஃபோலிக் ஆசிட்கள் மற்றும் செலினியம் ஆகியவை நம் அன்றாட பணிகளை மேற்கொள்ள உதவுவதுடன், நீண்ட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
ஆனால், முன்னர் ஒரு காலத்தில் கீரைகளை கைம்பெண்கள் சாப்பிடும் உணவாக ஒதுக்கி வைத்திருந்ததாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி, அந்த அளவிற்கு இழிவான உணவு பொருள் என கீரையை கருதியதாக அவர் கூறியுள்ளார். இது போன்ற உணவுகளை ஒதுக்கி வைத்து வெளிநாட்டு உணவுகளையே மக்கள் இன்று விரும்புகின்றனர்.
இவற்றை பழமை எனக் கூறி ஒதுக்கி வைக்கக் கூடாது என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். மாறாக, இவை புதுமை புகுத்தப்பட்ட மரபு சார்ந்த உணவுகள் எனவும், இவற்றை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us