/indian-express-tamil/media/media_files/2025/05/03/uZLXeYemyWUIWk8Z9Bhu.jpg)
மலம் என்பது காலைக் கடன் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை காலை நேரத்தில் எந்த விதமான சிரமமும் இன்றி கழித்தால் தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதற்கான அடையாளம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
ஆனால், இவ்வாறு மலத்தை சரியாக கழிக்காமல் மலச்சிக்கல் ஏற்பட்டால், அது பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். காலை எழும் போது மலம் கழிக்க வேண்டிய உணர்வுடன் இருத்தல் அவசியம். ஆனால், காபி குடித்தாலோ அல்லது நடைபயிற்சி மேற்கொண்டாலோ மட்டுமே மலம் கழிக்க முடியும் என்று இருப்பது மலச்சிக்கலை உணர்த்தும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
செரிமானக் கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு போன்றவை மூலமாக மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் பசியின்மை போன்றவை ஏற்படும். எனவே, தினந்தோறும் சரியான முறையில் மலத்தை கழிப்பது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், 4 அல்லது 5 காய்ந்த திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கான மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இது தவிர கடுக்காய் பிஞ்சுகளை வாங்கி அவற்றை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடியாக மாற்றி, மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இது குழந்தைகளின் செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இது தவிர பெரியவர்களின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க நிலவாகை பொடியை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இந்தப் பொடியை இரவு நேரத்தில் அரை டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us