வெயிலுக்கு வெடிக்கும் முகப்பருக்கள்... இந்த உணவுகளை இப்படி சாப்பிடணும்: மருத்துவர் சிவராமன்
முகப்பருக்கள் உருவாவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை தடுக்க என்ன வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
சுமார் 15 வயது முதல் 24 வயது வரை இருக்கும் நபர்கள் தங்கள் முகத்தில் வரக்கூடிய பருக்களை கண்டு அச்சப்படுவதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இவற்றை தடுக்க முடியும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
உடலில் இருக்கும் உஷ்ணத்தின் காரணமாக அதிகளவில் பருக்கள் உருவாகக் கூடும் என்று மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய சூழலில் நாம் சாப்பிடும் துரித உணவுகளில் பெரும்பாலானவை ஆரோக்கியமானது இல்லை எனக் கூறப்படுகிறது. இவை உடலில் உஷ்ணத்தை அதிகரிக்க ஒரு காரணமாக அமையலாம்.
அந்த வகையில் கருப்பு உளுந்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை பெண்களின் ஹார்மோனை சீராக்கி பருக்கள் ஏற்படுவதை தடுக்கிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். மேலும், உடல் உஷ்ணத்தை தணிக்க முதல் மருந்தாக செயல்படுவது தண்ணீர் தான். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
கூடுமானவரை எண்ணெய்யில் பொறித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். இதேபோல், பழங்கள் அடிக்கடி சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆப்பிள், அத்திப்பழம், பேரிச்சம்பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இட்லி, ஆப்பம், பொங்கல் போன்று ஆவியில் வேகவைத்த உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். இவை அனைத்தும் உடலின் உஷ்ணத்தை குறைக்க உதவும். இதன் மூலம் பருக்கள் வருவது கட்டுப்படுத்தப்படும். தினசரி காலை சுமார் 11 மணிக்கு மோர் குடிக்கலாம். இதேபோல், காலை 7 மணிக்கு இளநீர் குடிக்கலாம். இவை அனைத்தும் உடல் உஷ்ணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
உணவு முறையை இவ்வாறு வடிவமைத்துக் கொண்டால் மட்டுமே முகப்பரு பிரச்சனையில் இருந்து தீர்வு காண முடியும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.