உடல் சூடு குறையணுமா? இந்த உணவுக்கு மட்டும் 'நோ' சொல்லுங்க: டாக்டர் சிவராமன் டிப்ஸ்
உடலில் ஏற்படும் பித்தத்தை தணிக்க எந்த மாதிரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
உடலில் ஏற்படும் பித்தத்தை தணிக்க எந்த மாதிரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
உடல் சூட்டை தணிக்க வேண்டுமென்றால் முதலில் வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். அதனடிப்படையில், தினசரி தலைக்கு குளிக்க வேண்டும் என்று ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
அழுக்கை நீக்குவதற்காகவே குளிப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால், இரவு முழுவதும் உடலில் அதிகரித்திருக்கும் பித்தத்தை குறைப்பதற்காக தான் நாள்தோறும் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தபடியாக வாரத்திற்கு ஒரு நாளாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். இது தவிர உணவு முறை மாற்றங்களையும் கடைபிடிப்பதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார்.
அதனடிப்படையில், அதிகப்படியாக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், கொழுப்புகளை முழுமையாக தவிர்க்க கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார். ஏனெனில், பல வைட்டமின் சத்துகள் கொழுப்பில் கரைந்து தான் உடலில் செல்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதற்காக, குறைவான எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிடலாம். மேலும், ஊறுகாய், மிளகாய் பொடியில் எண்ணெய் விட்டு சாப்பிடுவது, எண்ணெய்யில் பொறித்த உணவுகள் மற்றும் டிரான்ஸ் ஃபேட் அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்த்து விடுவது பித்தத்தை குறைப்பதற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.