சமீபத்தில் ஒரு நாள் இரவு 1:30 மணிக்கு சென்னையில் அண்ணாநகர் பகுதியில், இளைஞர்களும் யுவதிகளும் பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிடுவதற்காக கூட்டம் கூடியிருந்ததைக் கண்டது வேதனையாக இருந்ததாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இரவு இரண்டு மணிக்கு இப்படி சாப்பிட்டு, எப்போது தூங்கி, காலையில் எப்படி இயங்குவார்கள் என்பது கவலையளிப்பதாகவும் ஆரோக்கியமான உணவுக்கான வழியையும் டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
உணவில் கவனம் செலுத்த வேண்டியவை:
இரவில், நள்ளிரவில் குப்பை உணவுகளை உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது. அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஆன்லைன் உணவு ஆர்டர்கள்: ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற செயலிகள் மூலம் ஆர்டர் செய்து, விருந்து உணவாக இரவு உணவை உட்கொள்கிறோம். இது முன்பு போல மதிய உணவின் மீதியை இரவு உணவாக உண்ணும் எளிய பழக்கத்தை மாற்றிவிட்டது.
Advertisment
Advertisements
உணவு ஆர்டர் செய்யும்போது, சலுகைகள் (offers), சுவை, மற்றும் விளம்பரங்கள் (விராட் கோலி சொல்வது போல) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவைத் தேர்வு செய்கிறோம். இன்றைய தமிழ்நாட்டில் உளவியல் நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகள் போதிய உறக்கமின்மை மற்றும் மன அழுத்தமான வாழ்வியல் முறையால் பாதிக்கப்படுகின்றனர்.
ஜப்பானில் உள்ள ஒக்கினோவா என்ற இடத்தில் சராசரி ஆயுட்காலம் 103 ஆண்டுகள். அங்கு வாழும் மக்கள் 116 வயது வரை கூட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
கருநீல சர்க்கரைவள்ளி கிழங்கு (Purple Sweet Potato), புரோக்கோலி, மற்றும் கடல் மீன். இவை அனைத்தும் குறைந்த கிளைசெமிக் உணவுகள். தனக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், மற்றும் புரோக்கோலியை தானே பயிரிடுகிறார். பசி 100% இருந்தாலும், 70% மட்டுமே சாப்பிடுகிறார். இந்த வாழ்வியல் அனுபவங்களை நாமும் கடைபிடித்து, ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.