ஈரலை க்ளீன் பண்ணும் ஜூஸ்... 48 நாள் இந்த நேரத்தில் மட்டும் குடிச்சா போதும்: டாக்டர் சௌமிளா

உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வதில் கல்லீரல் முக்கியமான பங்கு வகிக்கிறது. மேலும், உணவை செரிமானம் செய்யக் கூடியதும் கல்லீரல் தான் என்று மருத்துவர் சௌமிளா தெரிவித்துள்ளார்.

உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வதில் கல்லீரல் முக்கியமான பங்கு வகிக்கிறது. மேலும், உணவை செரிமானம் செய்யக் கூடியதும் கல்லீரல் தான் என்று மருத்துவர் சௌமிளா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Doctor Sowmiya

நம் உடலில் இருதயம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு கல்லீரலும் முக்கியம் என்று மருத்துவர் சௌமிளா கூறுகிறார். அந்த வகையில் கல்லீரலை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்றும், கல்லீரலில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வதில் கல்லீரல் முக்கியமான பங்கு வகிக்கிறது. மேலும், உணவை செரிமானம் செய்யக் கூடியதும் கல்லீரல் தான் என்று மருத்துவர் சௌமிளா தெரிவித்துள்ளார். 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலை சரியாக பராமரிக்காததன் விளைவாக இன்றைய சூழலில் பலரும் ஃபேட்டி லிவர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு படிவதாக மருத்துவர் சௌமிளா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவற்றை தடுப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். காலை உணவை 10 மணிக்கு முன்னதாக சாப்பிட்டு விட வேண்டும். மதிய உணவை சுமார் 2:30 மணிக்குள்ளாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மதிய உணவில் குறைவான சாதம் மற்றும் நிறைய காய்கறிகள், கீரை வகைகளை சாப்பிட வேண்டும். உணவு முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போன்று, சீரான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Advertisment
Advertisements

இது தவிர கீழாநெல்லி சாறு குடிப்பதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக மாற்ற முடியும். இதற்காக அரை கைப்பிடி அளவில் கீழாநெல்லி எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து காலை நேரத்தில் தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு குடிக்க வேண்டும் என்று மருத்துவர் சௌமிளா தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Health hazards of having a fatty liver

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: