கேன்சரை தடுக்கும் வல்லமை... சுகர் புண்ணை சீக்கிரம் குணப்படுத்தும்; இந்த மீன்கள் கிடைச்சா விடாதீங்க: சொல்லும் பிசியோதெரபிஸ்ட் சுபாஷ் சேது
பல்வேறு வகையான மீன்களில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் ஏராளமான சத்துகள் குறித்து பிசியோதெரபிஸ்ட் சுபாஷ் சேது விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
பல்வேறு வகையான மீன்களில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் ஏராளமான சத்துகள் குறித்து பிசியோதெரபிஸ்ட் சுபாஷ் சேது விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
அசைவ உணவுகளில் மீனுக்கு தனிச் சிறப்பு இருக்கிறது. சுவை மட்டுமின்றி இவற்றில் பல்வேறு விதமான சத்துகள் இருக்கின்றன. இவை நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அந்த வகையில் மீன்களில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் பிசியோதெரபிஸ்ட் சுபாஷ் சேது தெரிவித்துள்ளார். அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
Advertisment
பொதுவாக, பெரும்பாலான மீன்களில் 11% முதல் 23% வரை கொழுப்புச்சத்து உள்ளது. இது தவிர புரதச் சத்தும் மீன்களில் காணப்படுகின்றன. மத்தி மீனில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், மூட்டு பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
விரால் மீனில் இருக்கும் அல்புமின் புரதம், காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. இது மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும் இந்த மீன் பங்காற்றுகிறது. திலேப்பியா வகை மீன்களில் செலினியம் அதிகமாக உள்ளது. இது, புற்றுநோயை தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது.
பால்சுறா மற்றும் திருக்கை மீன்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகின்றன. அயோடின் அதிகமாக உள்ள சாளை மீன், தைராய்டு பிரச்சனையை சீரமைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகள் கெளுத்தி மீனில் காணப்படுகின்றன. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபயாடிக்காக இவை செயல்படுகின்றன. கெண்டை மீனில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது தசை செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
ஆரா மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைய இருக்கின்றன. இது மூளை செயல்பாட்டை தூண்டுகிறது மற்றும் மூளையில் இரத்த கட்டிகள் உருவாவதை தடுக்க உதவுகிறது. இதனால், ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை சீரமைக்க இவை உதவுகின்றன.
எனவே, இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்த மீன்கள் நம்முடைய உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிசியோதெரபிஸ்ட் சுபாஷ் சேது அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.