சுகருக்கு சவால் விடும் இந்த டிரிங்க்... கொஞ்சம் கொஞ்சமாக இந்த 2 வேளை மட்டும் குடிங்க: டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன்
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு வைத்திய முறையை எவ்வாறு பின்பற்றலாம் என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு வைத்திய முறையை எவ்வாறு பின்பற்றலாம் என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. முன்னர் இருந்த காலத்தில் வயதானவர்களிடம் காணப்பட்ட இந்த நோய், இன்றைய சூழலில் இளைஞர்களிடம் அதிகமாக இருக்கிறது.
Advertisment
இதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் என்று நிறைய காரணிகளால் சர்க்கரை நோய் ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறை குறித்து காஸ்மோ ஹெல்த் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
இதற்காக, இரண்டு கிளாஸ் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் கொதிக்கும் போது அரை டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீர் நன்றாக வற்றி சுமார் முக்கால் கிளாஸ் அளவிற்கு வர வேண்டும்.
அதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு இந்த தண்ணீரை வடிகட்டலாம். இவ்வாறு வடிகட்டிய தண்ணீரை சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக குடித்து வந்தால் சர்க்கரை நோய்க்கு வேறு எந்த மருந்தும் தேவையில்லை என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இவ்வாறு காலை மற்றும் மாலை என இரு வேளையும் இந்த கருஞ்சீரக தண்ணீரை பருகலாம் என்று மருத்துவர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, காலை நேரத்தில் உணவுக்கு முன்பாக இதனை குடிக்கலாம். ஆனால், இரவு நேரத்தில் இதனை குடிக்க வேண்டாம் என்று அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.