காலையில் எழுந்ததும் கால்களில் குத்துற மாதிரியான வலி; இந்த ஒரு பழம் சாப்பிட்டாப் போதும்: டாக்டர் உஷா நந்தினி
வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்கள் கட்டாயமாக மாதுளம் பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். மேலும், இதனை சாப்பிடும் முறை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நிறைய பெண்களுக்கு காலை எழுந்ததும் கை, கால் ஆகிய பகுதிகள் மரத்துப் போனதைப் போன்ற உணர்வு இருக்கும். குறிப்பாக, இடதுபுறம் அல்லது வலது புறம் என ஏதேனும் ஒரு பகுதி இவ்வாறு தோன்றும். மேலும் கால்களில் குத்துவது போல வலியும் ஏற்படும். இரத்தத்தில் வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால் இந்தப் பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
Advertisment
இந்தப் பற்றாக்குறை அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனையையும் விளைவிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, உணவு முறையைப் பொறுத்தவரை நாட்டுக் கம்பை சேர்த்துக் கொள்ளலாம். இதனை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அரைத்து கஞ்சியாக தயாரித்து குடிக்கலாம். இது வைட்டமின் பி 12 குறைபாட்டை சீரமைக்க உதவும்.
இதேபோல், இரத்தத்தில் பி 12 அளவை அதிகரிக்க மாதுளம் பழம் பெரிதும் உதவி செய்கிறது எனவும் மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெறும் வயிற்றில் ஒரு மாதுளம் பழத்தை முழுவதுமாக சாப்பிடுவது கூடுதல் நன்மையை வழங்கும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இவை மட்டுமின்றி வைட்டமின் சி, வைட்டமின் கே, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் மாதுளம் பழத்தில் நிறைந்திருக்கிறது. எனவே, மாதுளம் பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.