ஈரலை சுத்தி இருக்கும் கொழுப்பை கரைத்து வெளியேற்றும்... இந்த சிவப்பு நிற காய்கறியில் சூப் செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் உஷா நந்தினி
கல்லீரலின் பாதிப்பை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது. தக்காளியில் சல்ஃபர் மற்றும் க்ளோரின் ஆகிய இரண்டும் காணப்படுகிறது என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
கல்லீரலின் பாதிப்பை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது. தக்காளியில் சல்ஃபர் மற்றும் க்ளோரின் ஆகிய இரண்டும் காணப்படுகிறது என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் ஏராளமானோர் ஃபேட்டி லிவர் பாதிப்பினால் அவதிப்படுவதாக மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். குறிப்பாக, சுமார் 75 சதவீதம் பேருக்கு கிரேடு 1 ஃபேட்டி லிவர் பாதிப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இந்த ஃபேட்டி லிவர் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் உஷா நந்தினி அறிவுறுத்துகிறார். அந்த வகையில், என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தனது யூடியூப் சேனலில் மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்ற காய்கறிகளில் கல்லீரலை பாதுகாக்கும் தன்மை இருப்பதாக மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார். எனவே, இது போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் நம்முடைய உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக, கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் வெள்ளரிக்காயில் இருக்கிறது. எனவே, உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியமாக இருக்க வெள்ளரிக்காய்களை சாப்பிடலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இது மட்டுமின்றி கல்லீரலின் பாதிப்பை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது. தக்காளியில் சல்ஃபர் மற்றும் க்ளோரின் ஆகிய இரண்டும் காணப்படுகிறது என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். முக்கியமாக, கல்லீரலை சுற்றி இருக்கும் கொழுப்பு படிவத்தை முற்றிலும் கரைத்து வெளியேற்றும் தன்மை தக்காளியில் உள்ளது என்று மருத்துவர் உஷா நந்தினி வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தக்காளி சூப், சேலட் போன்றவற்றை சாப்பிடலாம். இவை அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றும் போது கல்லீரலில் இருக்கும் கொழுப்பு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் உஷா நந்தினி கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.