மாவுச்சத்து அதிகம் சாப்பிட்டால் இதையும் சேருங்க... வெயிட், சுகர் ஏறாது: டாக்டர் உஷா நந்தினி டிப்ஸ்!
மாவுச்சத்து அதிகம் உணவில் எடுத்து கொள்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் வரும். ஆனால் அவை எல்லாம் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும் என டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
மாவுச்சத்து அதிகம் உணவில் எடுத்து கொள்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் வரும். ஆனால் அவை எல்லாம் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும் என டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
'ஜீரோ கார்ப்' டயட் போன்ற உணவு முறைகள் பிரபலமடைந்து வரும் இக்காலத்தில், கார்போஹைடிரேட்கள் (மாவுப் பொருட்கள்) உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. இது குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், சித்த மருத்துவர் எம்.எஸ். உஷா நந்தினி, கார்போஹைடிரேட்களின் உண்மையான பங்கு மற்றும் அவற்றை எவ்வாறு ஆரோக்கியமாக உட்கொள்வது என்பது குறித்து புதுயுகம்டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
கார்போஹைடிரேட்களை வெறும் மாவுப் பொருளாக, நார்ச்சத்து இல்லாமல் உட்கொள்ளும்போது அது உடலுக்குத் தீமையை விளைவிக்கும் என்று மருத்துவர் உஷா நந்தினி வலியுறுத்துகிறார். மாறாக, மாவுப் பொருட்களுடன் நார்ச்சத்து சேர்த்து எடுக்கும்போது அது உடலுக்கு நன்மை பயக்கும்.
ஆரோக்கியமான கார்போஹைடிரேட் நுகர்வுக்கான சில முக்கிய குறிப்புகள் இங்கே:
அரிசி: வெள்ளை அரிசிக்கு பதிலாக, பழுப்பு அரிசி (பிரவுன் ரைஸ்) போன்ற நார்ச்சத்து நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை மெதுவாகவே அதிகரிக்கும்.
Advertisment
Advertisements
காய்கறிகள் மற்றும் கீரைகள்: நீங்கள் அரிசி அல்லது சப்பாத்தி சாப்பிடும்போது, அதனுடன் நிறைய காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடல் எடை அதிகரிக்காமலும், இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கவும் உதவும்.
ராகி: ராகி களி போன்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அதை கீரை குழம்பு அல்லது கீரை பொரியலுடன் சேர்த்து சாப்பிடலாம். இது உணவின் 'கிளைசெமிக் சுமை' (Glycemic Load) மற்றும் 'கிளைசெமிக் குறியீடு' (Glycemic Index) இரண்டையும் குறைக்க உதவும்.
சப்பாத்தி: வெறும் சப்பாத்தி சாப்பிடுவதற்குப் பதிலாக, நிறைய காய்கறிகளைச் சேர்த்து சாலட் போல தயார் செய்து சப்பாத்தியுடன் சாப்பிடலாம். இதுவும் கிளைசெமிக் குறியீடு மற்றும் சுமையைக் குறைக்கும்.
நீர்ச்சத்து உள்ள காய்கறிகள்: நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது, கார்போஹைடிரேட்களின் கிளைசெமிக் குறியீடு மற்றும் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவும்.
ஆகவே, மாவுப் பொருட்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், அவற்றை சரியான அளவில், குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம் நாம் முழுமையான ஆரோக்கிய பலன்களைப் பெற முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.