குழந்தைகளையும் பாதிக்கும் இளம் நரை... மோருடன் கருவேப்பிலை; இப்படி செய்து குடுங்க: டாக்டர் உஷா நந்தினி
குழந்தைகளுக்கு இளநரை பாதிப்பு வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர் உஷா நந்தினி விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு இளநரை பாதிப்பு வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர் உஷா நந்தினி விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இளநரை பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு கூட இளநரை இருப்பதாக மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார். புரதச் சத்து குறைபாடு காரணமாக இவ்வாறு இளநரை உருவாகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தலை முடிக்கு கெரட்டின் என்ற புரதம் அவசியம் தேவைப்படுகிறது என்று மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார். இவை குறையும் போது இளநரை உருவாகலாம். மேலும், மரபியல் கோளாறு காரணமாகவும் இளநரை பிரச்சனை இருக்கும். தைராயிடு பாதிப்பு இருந்தாலும் இளநரை உருவாகக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிக இரசாயனம் கலந்த பொருட்களை குழந்தைகளின் தலை முடியில் பயன்படுத்தும் போதும் இளநரை வரும். இரும்புச் சத்து, ஸின்க், செலினியம், வைட்டமின்கள் டி, சி, பி12 மற்றும் ஃபோலேட் ஆசிட் போன்ற சத்துக் குறைபாடு காரணமாகவும் குழந்தைகளுக்கு இளநரை வருவதாக மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார்.
இவ்வளவு காரணங்களால் ஏற்படும் இளநரை பாதிப்பை கறிவேப்பிலை கொண்டு குணப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், முடியின் மெலனினை அதிகரிக்க கறிவேப்பிலையால் முடியும் என்று அவர் கூறுகிறார். அந்த வகையில் கறிவேப்பிலையை குழந்தைகளுக்கு தினந்தோறும் கொடுக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இதற்காக, மோரில் கலந்து கறிவேப்பிலையை கொடுக்கலாம். மேலும், கறிவேப்பிலை பொடியை சாதத்துடன் சேர்த்தும் கொடுக்கலாம். இந்தப் பொடியை தோசையில் சேர்த்தும் கொடுக்கலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி பரிந்துரைக்கிறார். இது தவிர கறிவேப்பிலை ஹேர்பேக்கும் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
அதன்படி, கறிவேப்பிலையை நன்றாக அரைத்து அத்துடன் இரண்டு துளிகள் யூகலிட்பஸ் எண்ணெய்யை சேர்த்து ஹேர்பேக்காக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் இளநரை பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
நன்றி - PuthuYugamTV Youtube Channel
\
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.