மகிழ்ச்சியின் நீரூற்று… டோபமினை அதிகரிக்கும் உணவுகள் இவைதான்; டாக்டர் வேணி
மகிழ்ச்சியான மனநிலையை அளிக்கும் டோபமினை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளின் பட்டியலை மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். அவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகிழ்ச்சியான மனநிலையை அளிக்கும் டோபமினை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளின் பட்டியலை மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். அவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கி தான் பயணிக்கிறோம். அந்த வகையில் நாம் செய்யும் அனைத்துமே நம்முடைய மகிழ்ச்சியை அடிப்படையாக கொண்டது தான். இந்த மகிழ்ச்சிக்கு டோபமின் என்ற வேதிப்பொருள் தேவை என மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார்.
Advertisment
நமது மனநிலையை தீர்மானிப்பதற்கு, உந்துசக்தியாக இருப்பதற்கு, இயக்கவியல் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாகும் நிலை ஆகியவற்றில் டோபமின் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர் வேணி குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் டோபமினை அதிகரிப்பதற்கு நாம் செய்ய வேண்டிய உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
டோபமினை அதிகரிக்க உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் வேணி பரிந்துரைக்கிறார். இது, டோபமினை அதிகரிப்பதுடன் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தியானம் இருப்பதும் டோபமினை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
Advertisment
Advertisements
இது தவிர இசை, மனம் விட்டு சிரிப்பது, இயற்கையுடன் நேரம் செலவிடுவது ஆகியவை டோபமினை அதிகரிக்கும். இரவில் போதுமான அளவு உறங்கும் போது, உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், டோபமினையும் வெளியிட உதவும்.
உணவு முறை மாற்றத்தின் மூலமும் டோபமினை அதிகப்படுத்தலாம் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார். அதற்காக கீரை வகைகள், பூசணி விதைகள், பாதாம் போன்ற விதை வகைகள், வாழைப்பழம், ஆப்பிள், அவகேடோ போன்றவற்றை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் போது டோபமின் அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - Neuro Doctor Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.