வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து இப்படி சாப்பிடணும்: ரத்தக் கொழுப்பை கரைக்க டாக்டர் வேணி ஆலோசனை
இரத்தக் கொழுப்பை குறைக்க எந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் வேணி பரிந்துரைத்துள்ளார். மேலும், அவற்றை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான கலோரிகளை விட அதிகமாக நாம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது என மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதில்லை. அவை தவிர அதிகமாக சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
பெரும்பாலும் அசைவ உணவுகளில் பட்டை மற்றும் பூண்டு ஆகியவை சேர்க்கப்படும். அதன்படி, ஃபேட் ஆக்சைடேஷனை பூண்டு அதிகப்படுத்துகிறது என மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். இதேபோல், மெட்டபாலிக் ரேட்டை பட்டை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் கொழுப்பு கரைக்கப்படுகிறது.
இதன் காரணமாக தான் அசைவ உணவுகளில் பட்டை மற்றும் பூண்டு அதிகளவில் சேர்க்கப்படுகிறது என மருத்துவர் வேணி குறிப்பிட்டுள்ளார். எனவே, பட்டை மற்றும் பூண்டு ஆகியவை நம் அன்றாட உணவில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இதற்கு கொழுப்பை கரைக்கும் தன்மையும், புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதனால், தினசரி வைக்கும் குழம்பில் மஞ்சள் சேர்க்கலாம் என மருத்துவர் வேணி பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
இன்சுலின் சென்ஸிடிவிட்டியை மேம்படுத்த வெந்தயம் உதவுகிறது. அந்த வகையில், காலை எழுந்ததும் சுமார் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், வெந்தயத்தை சாப்பிட்டு விட்டு, அதன் தண்ணீரையும் குடிக்கலாம். மேலும், முளைகட்டிய வெந்தயத்தையும் சாப்பிடலாம். இப்படி செய்தால் சர்க்கரை நோயாளிகளின் சுகர் அளவு சீராக இருக்கும்.
காலை நேரத்தில் சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ குடிப்பது கொழுப்பை குறைக்க உதவும். இதில் பட்டை பொடியை சற்று சேர்த்துக் கொண்டால் கூடுதல் பலன் அளிக்கும் என மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார். இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தேவையற்ற கொழுப்பை கரைக்கலாம்.
நன்றி - Neuro Doctor Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.