மூலம், பவுத்திரம் வராமல் தடுக்கும் மாதுளம் பூ... இப்படி ரெடி செஞ்சு சாப்பிடுங்க: சொல்லும் டாக்டர்
மூலம், பவுத்திரம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதில் மாதுளம் பூ எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
மூலம் மற்றும் பவுத்திரம் ஆகிய பிரச்சனைகள் குறித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பலர் தயங்குவார்கள். இதற்காக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதில் கூட சிலர் தயக்கம் காட்டுவார்கள். அந்த வகையில் மூலம், பவுத்திரம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
இந்த வகையில் மாதுளம் பழப் பூவை தண்ணீர் சேர்க்காமல் சுமார் 50 மில்லி லிட்டர் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் பனங்கற்கண்டு கலந்து தினசரி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும் என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். இதில் மூலம் தொடர்பான பிரச்சனைகள் குணமடையும்.
இதேபோல், கருணைக்கிழங்கு லேகியமும் மூலத்திற்கு மருந்தாக வழங்கப்படுகிறது. அதன்படி, கருணைக்கிழங்கை சிறிது நேரம் மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து விட்டு, அதன் பின்னர் தோல் நீக்கி சமைத்து மசியலாக சாப்பிடலாம். இது தவிர சுண்டைக்காய்களையும் குழம்பாக வைத்து சாப்பிடலாம். இல்லையெனில் சுண்டைக்காய் சூரணத்தை சித்த மருந்துக் கடையில் இருந்து வாங்கி பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இது மட்டுமின்றி வெளிப்புறமாக திரிபலா பொடி வைத்து சுத்தப்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதனை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்னர் ஆறியதும் மூலம் பாதிப்பு இருக்கும் பகுதியை சுத்தம் செய்யலாம். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் போன்ற பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம் என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.