இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து டாக்டர் யோகவித்யா எத்னிக் ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத்தாழ்வுகளே இதய நோய்க்கு அடிப்படையாக அமைகின்றன என டாக்டர். பி. யோகவித்யா குறிப்பிடுகிறார்.
Advertisment
வாதம்: இரத்த நாளங்களை வாயு அடைப்பதன் மூலம் இதய நோய்க்கு வழிவகுக்கிறது.
பித்தம்: உடலில் ஏற்படும் அதிக வெப்பம் இதயப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது.
கபம்: ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.
Advertisment
Advertisements
வாதக் குறைபாட்டிற்கு: பூண்டை பாலுடன் சேர்த்து உட்கொள்வது, சின்ன வெங்காய சாற்றை தேனுடன் கலந்து குடிப்பது, எலுமிச்சை சாற்றை மஞ்சள் மற்றும் இஞ்சியுடன் சேர்த்து அருந்துவது, மற்றும் பெருங்காயத்தை உணவில் சேர்ப்பது ஆகியவை வாயுவை அகற்றி வாதத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
பித்தக் குறைபாட்டிற்கு: நெல்லிக்காய் சாறு, மாதுளை சாறு, மற்றும் உலர்ந்த மாதுளைப் பொடியை பால் அல்லது தேனுடன் சேர்த்து உட்கொள்வது போன்ற காரத்தன்மை கொண்ட உணவுகள் பித்தத்தைக் குறைக்க உதவும்.
கபக் குறைபாட்டிற்கு: இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் போன்ற இயற்கையான கொழுப்பு எரிப்பான்களை உணவில் சேர்த்துக்கொள்வது கபத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
இதய தசைகளை வலுப்படுத்தவும், உள் வெப்பத்தைக் குறைக்கவும், உலர்ந்த தாமரை இதழ்களை பனை வெல்லம் மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொள்வதுடன், மருதம் பட்டை கஷாயம் போன்றவையும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.