இன்றைய சூழலில் பெரும்பாலான ஆண்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்தப் பிரச்சனைகள் குறித்து தகுந்த ஆலோசனைகள் பெற ஆண்கள் தயக்கம் காண்பிக்கின்றனர். இவ்வாறு கால தாமதம் செய்வதால் பிரச்சனை மேலும் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Advertisment
இதில் முக்கியமான ஒரு பிரச்சனையாக விந்து முந்துதல் காணப்படுகிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். இந்தப் பிரச்சனை தொடர்பான விளக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வகையில், சுமார் 30 விநாடிகளில் இருந்து 60 விநாடிகளில் விந்து வெளியேறுவதை விந்து முந்துதல் என்று கூறுகின்றனர். ஆரோக்கியமான விந்து கெட்டித் தன்மையுடன் இருக்கும். ஆனால், விந்து நீர்த்துப் போய் இருந்தால் விரைவாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி மன அழுத்தம், அதீத உடல் சூடு போன்றவையும் விந்து முந்துதலுக்கு காரணமாக அமையக் கூடும். இதேபோல், தமிழ்நாட்டின் காலநிலையில் இருந்து கொண்டு, வட மாநிலங்களில் விளையக் கூடிய கோதுமை உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்ளும் போது வெப்பம் அதிகரிப்பின் காரணமாகவும் விந்து முந்துதல் நடைபெறலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
எனவே, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். கோதுமை உணவிற்கு மாற்றாக பாரம்பரிய உணவுகளை சாப்பிடலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். சாமை, திணை, குதிரைவாலி, ராகி போன்ற பொருட்களை உணவுகளாக எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் விளையக் கூடிய உணவுகள் நம்முடைய உடலுக்கு பொருந்தும் வகையில் இருக்கும். ஆனால், வட மாநில உணவுகள் இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு ஏற்றதாக இருக்காது. இதனால் உடலில் சூடு அதிகரித்து விந்து முந்துதல் பிரச்சனை உருவாகக் கூடும்.
சத்தான உணவுகள் சாப்பிடுவது, வாரம் ஒரு முறை உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, பாலில் தேன் கலந்து குடிப்பது, விதைகள் சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆகியவை விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் தவறாமல் கடைபிடிக்கும் போது விந்து முந்துதல் பிரச்சனையை சீரமைக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.