முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் இந்த சத்து... இளம் வயது நரையை துரத்த இப்படி சாப்பிடுங்க: டாக்டர் யோக வித்யா
இளநரை உருவாகும் காரணம் குறித்து மருத்துவர் யோக வித்யா விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை தடுப்பதற்கு எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளநரை உருவாகும் காரணம் குறித்து மருத்துவர் யோக வித்யா விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை தடுப்பதற்கு எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை இளநரை. இதனை எப்படி தடுப்பது என்று பலருக்கு தெரியவில்லை. அதன்படி, இளநரை உருவாவதற்கான காரணம் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறை குறித்து மருத்துவர் யோக வித்யா வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
முட்டையின் மஞ்சள் கரு, வால்நட், பூசணி விதைகள் போன்றவற்றில் ஸின்க் சத்து நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். எனவே, இந்த பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது பித்த நரையை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
உடலில் இருக்கு கடுமையான உஷ்ணத்தின் காரணமாகவும் இளநரை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். அந்த வகையில், உடல் உஷ்ணத்தை குறைப்பதன் மூலம் இளநரை பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
அதனடிப்படையில், வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை குறைக்க முடியும். இது தவிர கீழாநெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகள் போன்றவற்றையும் மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இவை நம் கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
Advertisment
Advertisements
இவற்றை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். இந்த சாறை 30 முதல் 60 மில்லி லிட்டர் அளவில் வாரம் ஒரு முறை குடிக்க வேண்டும். இதைக் குடித்த பின்னர், ஒரு கிளாஸ் மோரும் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.
குறிப்பாக, மஞ்சள் காமாலையை பித்த நோய் என்று கூறுவார்கள். இத்தகைய பித்த நோய்க்கு இவற்றை மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதனடிப்படையில், பித்த நரையை போக்கும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - News7 Tamil Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.