ஈரலில் கொழுப்பு? வெறும் வயிற்றில் இந்த சாறு; அப்பறம் கொஞ்சம் மோரு: டாக்டர் வித்யா யோசனை
ஈரலில் இருக்கும் கொழுப்பை கரைத்து அதனை ஆரோக்கியாமாக மாற்றுவதற்கு வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதற்காக கீழாநெல்லி சாறு குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
ஈரலில் இருக்கும் கொழுப்பை கரைத்து அதனை ஆரோக்கியாமாக மாற்றுவதற்கு வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதற்காக கீழாநெல்லி சாறு குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரையை ஈரலால் மட்டுமே செரிமானம் செய்ய முடியும். ஒரு கட்டத்தில் இதன் அளவு மீறும் போது ஈரலால் இதனை ஜீரணிக்க முடியாது. அந்தக் கட்டத்தில் ஈரலில் இருக்கும் செல்கள் அனைத்தும் வீங்கி விடும். இதனையும் மீறி தொடர்ந்து ஃப்ரக்டோஸ் எடுத்துக் கொண்டால் ஈரல் முழுவதுமாக பாதிக்கப்படும்.
Advertisment
உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், சீரான உடல் உழைப்பு இல்லாதவர்கள், புகைப்பழக்கம் இருப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு ஈரலில் கொழுப்பு படியும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
கீழாநெல்லி சாறு குடிப்பதன் மூலம் ஈரலில் இருக்கும் கொழுப்பை கரைக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கீழாநெல்லியை நன்றாக கழுவிய பின்னர், சுமார் 30 மில்லி லிட்டர் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சாறை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குறிப்பாக, 48 நாட்களுக்கு தினந்தோறும் இதனை குடிக்க வேண்டும் என மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இதன் பின்னர், ஒரு கிளாஸ் மோர் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது நம்முடைய ஈரல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
Advertisment
Advertisements
இது ஃபேட்டி லிவர் பாதிப்பை குறைக்கிறது. மேலும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் கீழாநெல்லி சாறு பயன்படுகிறது. இது மட்டுமின்றி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் குறைப்பதற்கு கீழாநெல்லி உதவுகிறது. சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கும் கீழாநெல்லி சாறை உபயோகிக்கலாம்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.