இந்த 3 பழ தோலின் ஜூஸ்... வீட்டில் இருந்தபடியே இயற்கை வயாகரா இப்படி ரெடி பண்ணுங்க: டாக்டர் யோக வித்யா

வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் வயாகரா தயாரித்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் வயாகரா தயாரித்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Viagra juice

நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கு வயகாரா எடுத்துக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு இருக்கும். எனினும், இயற்கையான முறையில் வயாகரா தயாரிக்க முடியுமா என்ற கேள்வி நிறைய ஆண்களிடம் உள்ளது. அந்த வகையில் வீட்டில் இருக்கும் சிம்பிளான உணவு பொருட்கள் கொண்டு வயாகரா தயாரிப்பது எப்படி என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

Advertisment

அதன்படி, உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக ஒரு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். அந்த வகையில் தர்பூசணி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தோலுடன் சேர்த்து அரைத்து ஜூஸாக குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து, நீண்ட நேரம் விறைப்புத் தன்மை இருக்கும் என்றும், இதன் மூலம் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

இதேபோல், தினசரி வெண்பூசணியை இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஜூஸாக குடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இயற்கையாகவே காமத்தை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதால், நீண்ட நேர உடலுறவிற்கு இது பலன் அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தவிர உடலுறவு வைத்துக் கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாலில் ஜாதிக்காய் பொடி மற்றும் கசகசா சேர்த்து குடிக்கலாம். இந்த பொருட்களுக்கு காமத்தை தூண்டும் சக்தி இருப்பதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். மேலும். விந்தணுக்களின் தரத்தை அதிகரித்து அதனை கெட்டியாக்கும் தன்மையும் இதற்கு இருக்கிறது.

Advertisment
Advertisements

இது மட்டுமின்றி தினசரி காலை நேரத்தில் ஊற வைத்த வெந்தய தண்ணீரை குடிக்கும் போது, சூடு தணிந்து நரம்பு மண்டலம் உறுதியாகும். அந்த வகையில் நீடித்த உடலுறவிற்கு இதுவும் உதவியாக இருக்கும். இந்த இயற்கையான பொருட்களை சரியான முறையில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுறவு நேரத்தை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

நன்றி - I Tamil News Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: