இந்தியன் வயாகரா சிலாசத்து... எப்படி பயன்படுத்துவது? சொல்லும் டாக்டர் யோக வித்யா
ஆண்களுடைய விந்தணுக்களின் உற்பத்தியை சிலாசத்து எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தும் முறை குறித்து அவர் கூறியுள்ளார்.
ஆண்களுடைய விந்தணுக்களின் உற்பத்தியை சிலாசத்து எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தும் முறை குறித்து அவர் கூறியுள்ளார்.
இன்றைய சூழலில் சிலாசத்து பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஆண்களுக்கு ஏற்படக் கூடிய விறைப்புத் தன்மை கோளாறு, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக சிலாசத்து கருதப்படுகிறது. எனவே, இதனை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில் நாம் வாங்கும் சிலாசத்து தரமானது தானா என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதன்படி, கடைகளில் இருந்து வாங்கி வரும் சிலாசத்தை, நெருப்பில் காட்ட வேண்டும். அப்போது, புகை வெளியேறாமல் இருந்தால், அது உண்மையான சிலாசத்து என்று அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர சிலாசத்தை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும். அதன்படி, கடைகளில் இருந்து வாங்கி வரும் சிலாசத்தை, தண்ணீரில் கரைத்து, துணியில் வடிகட்டி, வெயிலில் உலர்த்தி அதன் பின்னர் பொடியாக்கி பயன்படுத்தலாம். இதனை எடுத்துக் கொள்ளும் போது ஆண்களுக்கான பிரச்சனைகளை மூன்று நாட்களில் கூட சரி செய்யலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
சிலாசத்தை 1.5 கிராம் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அரை வேக்காடாக வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவில் வைத்து, ஒரு நாளைக்கு ஒரு வேளை என்ற அளவில் மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது மூன்றே நாட்களில் கூட ஆண்மைத் தன்மை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டதாக மருத்துவர் யோக வித்யா கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
விறைப்புத் தன்மை குறைவாக இருப்பவர்கள், விரைவாக விந்து வெளியேறும் பிரச்சனை இருப்பவர்கள், தூக்கத்தில் விந்து வெளியேறுபவர்கள் போன்றோர் சிலாசத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைக்கிறார்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.