/indian-express-tamil/media/media_files/2025/04/09/c74HquMj2gKQvFuEhPKK.jpg)
நாம் எதிர்பார்க்காத சில பொருட்களில் கூட பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கும். அது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் போது நமக்கு ஆச்சரியம் உண்டாகும். அந்த வகையில், அவற்றை சரியான முறையில் எடுத்துக் கொள்ளும் போது நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இந்நிலையில், சித்த மருத்துவத்தில் சந்தனத்தின் பயன்பாடுகள் குறித்து மருத்துவர் யோக வித்யா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இருதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த சந்தனம் பயன்படுகிறது என்று அவர் கூறுகிறார். மேலும், உடலை குளிர்ச்சியாக்கவும் சந்தனத்தை பயன்படுத்தலாம்.
சந்தனத்தை வெளிப்புறமாக பயன்படுத்துவது குறித்து எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலனவர்கள் அந்த வகையில் தான் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால், சந்தனத்தை மருந்தாகவும் உட்கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.
அதன்படி, சந்தனத்தை நன்றாக இழைத்து சுண்டைக்காய் அளவிற்கு எடுத்து பாலில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்யும் போது நம்முடைய இரத்தம் சுத்திகரிக்கப்படும். மேலும், நம் உடலில் இருக்கும் அணுக்கள் சேதமடவதையும் இது தடுக்க உதவுகிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார்.
அந்த வகையில், சந்தனத்தை அழகு சார்ந்த பொருளாக மட்டும் பயன்படுத்தாமல் அதன் முழு ஆற்றலை அறிந்து மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா வலியுறுத்துகிறார்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us