வயாகரா மாத்திரைக்கு குட்பை... இயற்கை முறையில் இப்படி செய்து குடிங்க: டாக்டர் யோக வித்யா

இயற்கையான பொருட்களை பயன்படுத்தி விறைப்புத் தன்மை பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது.

இயற்கையான பொருட்களை பயன்படுத்தி விறைப்புத் தன்மை பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது.

author-image
WebDesk
New Update
Erection tips

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் விறைப்புத்தன்மை என்பது மிக முக்கியமான அம்சமாகும். இது, திருப்திகரமான பாலியல் செயல்பாட்டிற்கு அடிப்படையாக அமைகிறது. ஆனால், இன்றைய சூழலில் நிறைய ஆண்களிடம் விறைப்புத் தன்மை பிரச்சனை இருக்கிறது.

Advertisment

உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு விதமான காரணங்களால் விறைப்புத் தன்மை பிரச்சனை ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி விறைப்புத் தன்மை பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது. இது குறித்த தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீட்ரூட், மாதுளம் பழம், தர்பூசணி ஆகிய மூன்றையும் சம அளவில் சேர்த்து அரைத்து வடிகட்டி ஜூஸ் எடுத்து குடிக்கலாம். இந்த ஜூஸ் குடிக்கும் போது இதில் இருந்து கிடைக்கும் நைட்ரஸ் ஆக்ஸைட் நம்முடைய இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.

இதன் காரணமாக ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை பிரச்சனையை சரி செய்ய முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி மற்றொரு வழிமுறையை பின்பற்றலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக பாலில் ஜாதிக்காய், கசகசா ஆகியவற்றை சேர்த்து காய்த்து குடிக்கலாம். இதுவும் விறைப்புத் தன்மையை பராமரிக்க உதவுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், கசகசா ஒரு டேபிள் ஸ்பூன், ஜாதிக்காய் பொடி கால் டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

இத்துடன் தேவைக்கேற்ப தேன் அல்லது பனக்கற்கண்டு எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இவ்வாறு தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு பின்பற்றும் போது, 8-வது நாளில் இருந்து மாற்றம் நிகழும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: