வயகரா மாத்திரை வேணாம்... கண்ணுக்கு பாதிப்பு இருக்கு; அதுக்கு பதில் இந்த ஜூஸ் குடிங்க போதும்: டாக்டர் யோக வித்யா

இதற்காக நைட்ரஸ் ஆக்ஸைடு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, பீட்ரூட், மாதுளம் பழம் மற்றும் தர்பூசணி பழம் ஆகியவற்றை சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக நைட்ரஸ் ஆக்ஸைடு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, பீட்ரூட், மாதுளம் பழம் மற்றும் தர்பூசணி பழம் ஆகியவற்றை சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sperm count

வயகரா மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஆண்மையை அதிகரிக்கும் வகையில் என்ன மாதிரியான உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

எந்தவொரு செயற்கையான மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது அதற்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். அதேபோல், வயகாரா மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கண்களில் பாதிப்பு ஏற்படக் கூறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தடுக்க வீட்டிலேயே இயற்கையான உணவுகளை பயன்படுத்தி ஆண்மையை அதிகரிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதற்காக நைட்ரஸ் ஆக்ஸைடு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, பீட்ரூட், மாதுளம் பழம் மற்றும் தர்பூசணி பழம் ஆகியவற்றை சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவை மூன்றையும் சம அளவில் எடுத்து, அவற்றை மிக்ஸியில் அரைத்து அதன் பின்னர் வடிகட்டி ஜூஸாக குடிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைக்கிறார். நைட்ரஸ் ஆக்ஸைடு நிறைந்த உணவுகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறுகிறார்.

Advertisment
Advertisements

இதன் மூலம் விறைப்புத் தன்மை பாதிப்பை குணப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாலில் கசகசா மற்றும் ஜாதிக்காய் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

இவற்றை தொடர்ந்து பின்பற்றும் போது விறைப்புத் தன்மை தொடர்பான பாதிப்புகள் குணமடைந்து விந்தணுக்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: