சீக்கிரம் விந்து வெளியேறுதல்... காலை, நைட் இதுல 2 ஸ்பூன் சாப்பிடுங்க: மருத்துவர் யோக வித்யா
ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மற்றும் விரைவாக விந்து வெளியேறுவதை எப்படி தடுப்பது என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மற்றும் விரைவாக விந்து வெளியேறுவதை எப்படி தடுப்பது என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் நிறைய ஆண்களிடம் மலட்டுத்தன்மை காணப்படுகிறது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். மது அருந்துதல், புகைப்பழக்கம், சுய இன்பம் மற்றும் மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது என்று அவர் கூறுகிறார்.
Advertisment
இந்தப் பிரச்சனைகள் குறித்து ஆண்கள் அவ்வளவாக வெளியே சொல்வதில்லை. தங்களுக்கு இருக்கும் தயக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை காரணமாக இதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், முறையான மருத்துவ சிகிச்சை எடுக்காமல், பிரச்சனை தீவிரமாக மாறி விடுகிறது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
அத்தகைய பிரச்சனை ஏற்டாமல் இருப்பதற்கு ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் குறித்து மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக உடலில் இருக்கும் உஷ்ணத்தின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.
இதற்காக வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். மேலும், காலை மற்றும் இரவு நேரத்தில் ராஜா இதழ்களில் இருந்து செய்யப்பட்ட குல்கந்தை இரண்டு ஸ்பூன் அளவில் சாப்பிடலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இவ்வாறு செய்யும் போது விதைப்பை குளிர்ச்சி அடையும்.
Advertisment
Advertisements
இது மட்டுமின்றி விறைப்புத் தன்மையை அதிகரிப்பதுடன், விரைவாக விந்து வெளியேறும் பிரச்சனையையும் தடுக்க முடியும். இளநீர், பானகம், நீர்மோர் போன்றவற்றை அடிக்கடி பருகலாம். இரவு நேரத்தில் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
இந்த பழக்கங்கள் அனைத்தையும் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் போது பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.