தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இந்த மீன்...கிச்சன்ல இருக்க இதையும் அடிக்கடி இப்படி சாப்பிடுங்க: டாக்டர் யோக வித்யா
பாலூட்டும் தாய்மார்கள் தங்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைத்துள்ளார். அவற்றை இதில் காணலாம்.
பாலூட்டும் தாய்மார்கள் தங்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைத்துள்ளார். அவற்றை இதில் காணலாம்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள் பலருக்கு இன்று, தாய்ப்பால் சுரப்பு போதுமானதாக இல்லை என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். தாய்ப்பால் சுரக்க உதவியாக இருப்பது ப்ரொலக்டன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் என்ற இரண்டு ஹார்மோன்கள் தான்.
Advertisment
இந்த ஹார்மோன்களை அதிகப்படுத்தும் உணவு வகைகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்த முடியும் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இதற்காக, தாய்மார்கள் அனைவரும் பசும்பாலை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். இது தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது.
இது மட்டுமின்றி தாய்மார்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு கட்டாயமாக சுமார் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர குழந்தையை எப்போதும் பக்கத்தில் வைத்திருப்பதால், அவர்களின் உடலில் இருக்கும் உஷ்ணம் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே, தாய்மார்கள் பலரும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.
வெந்தயத்தை நன்றாக ஊற வைத்து அதனை, தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அதில் ப்ரொலக்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை அதிகரிக்கும் சத்து சரியான அளவில் இருக்கிறது. அசைவ உணவுகளை பொறுத்த வரை சுறா மீனை சாப்பிடலாம். நேந்திரம் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியையும் சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
இவை அனைத்தையும் தவறாமல் பின்பற்றும் போது, தாய்மார்களிடம் பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். எனவே, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கும்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.