விந்து நீர்த்துப் போய் விட்டதா? இந்த உணவை மட்டும் தொடாதீங்க: டாக்டர் யோக வித்யா

பாகற்காய் போன்ற கசப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அவை விந்தணுக்களை அழிக்கக்கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.

பாகற்காய் போன்ற கசப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அவை விந்தணுக்களை அழிக்கக்கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.

author-image
WebDesk
New Update
Sperm count

ஆண்களுடைய விந்தணுக்கள் நீர்த்துப் போய் காணப்பட்டால், அதனை எவ்வாறு கெட்டியாக மாற்றலாம் என்றும், எந்த விதமான உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும் மருத்துவர் யோக வித்யா, தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதன்படி, மைதா மற்றும் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் தூயமல்லி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை அதிகம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பச்சை பயறை கடைந்து சாப்பிடலாம். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது விந்தணுவின் அடர்த்தியை அதிகரிக்கும்.

பாகற்காய் போன்ற கசப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அவை விந்தணுக்களை அழிக்கக்கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். அவகேடோ (பட்டர் ஃப்ரூட்) கிடைத்தால், வாரம் இருமுறை அல்லது மூன்று முறை பால், தேன் சேர்த்து மில்க் ஷேக்காக குடிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

Advertisment
Advertisements

தினமும் இரவு செவ்வாழைப்பழம் மற்றும் பாலில் தேன் கலந்து குடிக்கலாம். தினமும் 10 பாதாம் பருப்புகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சாரப்பருப்பு ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, விந்தணுவின் அடர்த்தியை மேம்படுத்த உதவும்.

இது தவிர, வாரத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இது போன்ற உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை தொடர்ந்து பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: