தென் ஆப்பிரிக்க வயாகரா... இந்த 3 பொருளின் தோலை அரைத்து; இப்படி ரெடி செய்து குடிங்க: டாக்டர் யோக வித்யா
தர்பூசணி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தோலுடன் சேர்த்து அரைத்து சாறு தயாரிக்கலாம். இந்த பானத்தை குடிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதனால் கூடுதல் நேரம் விறைப்புத்தன்மை நீடிக்கும்.
தர்பூசணி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தோலுடன் சேர்த்து அரைத்து சாறு தயாரிக்கலாம். இந்த பானத்தை குடிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதனால் கூடுதல் நேரம் விறைப்புத்தன்மை நீடிக்கும்.
சில ஆண்கள் உடலுறவு கொள்ளும் நேரத்தை அதிகப்படுத்த வயாகரா மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால், இயற்கையான உணவுகள் மூலம் விறைப்புத் தன்மையை எவ்வாறு நீட்டிக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
இதற்காக, தர்பூசணி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தோலுடன் சேர்த்து அரைத்து சாறு தயாரிக்கலாம். இந்த பானத்தை குடிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதனால் கூடுதல் நேரம் விறைப்புத்தன்மை நீடிக்கும். இதன் மூலம் அதிக நேரம் உடலுறவு கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார். இது தென் ஆப்பிரிக்க நாட்டில் மிகவும் பிரபலமானது.
தினமும் வெண்பூசணியை அரைத்து இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம். வெண்பூசணிக்கு இயற்கையாகவே காமத்தை தூண்டும் சக்தி இருப்பதால், இது நீண்ட நேர உடலுறவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
உடலுறவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பாலில் ஜாதிக்காய் பொடி மற்றும் கசகசா சேர்த்து அருந்தலாம். இந்த பொருட்களுக்கு காமத்தை தூண்டும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். கூடுதலாக, இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, அவற்றை கெட்டியாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
Advertisment
Advertisements
இது தவிர தினமும் காலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீரை குடிப்பதும் உடலுக்கு நல்லது. இது உடலின் சூட்டை குறைத்து நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். அதன்படி, நீடித்த உடலுறவுக்கு இதுவும் உதவியாக இருக்கும். இந்த இயற்கையான பொருட்களை சரியான விதத்தில் எடுத்துக் கொள்வதன் வாயிலாக உடலுறவு நேரத்தை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.