இயற்கை வயாகரா... விறைப்புத் தன்மையை அதிகப்படுத்தும் இந்த ஜூஸ்: டாக்டர் யோக வித்யா டிப்ஸ்
விறைப்புத் தன்மையை எவ்வாறு இயற்கையான முறையில் மேம்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இது வயாகராவுக்கு இணையாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
விறைப்புத் தன்மையை எவ்வாறு இயற்கையான முறையில் மேம்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இது வயாகராவுக்கு இணையாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
இயற்கையான முறையில் வயாகரா எடுத்துக் கொள்வது தொடர்பாக மருத்துவர் யோக வித்யா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் விறைப்புத் தன்மையை அதிகப்படுத்துவதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் நைட்ரஸ் ஆக்ஸைடு நிறைந்துள்ளது. இவை உடலில், இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. இது ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது. மேலும், விறைப்புத் தன்மை பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.
மாதுளை ஜூஸ்: மாதுளையில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவி செய்கிறது. குறிப்பாக, விறைப்புத் தன்மையை பராமரிக்க உதவுகிறது.
தர்பூசணி ஜூஸ்: தர்பூசணியில் சிட்ருலின் (Citrulline) என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் நைட்ரஸ் ஆக்சைடாக மாறி, இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, உடல் சோர்வையும் குறைக்க உதவும்.
Advertisment
Advertisements
இந்த ஜூஸ்களை ஒன்றாக கலந்து தினமும் அருந்துவது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிடுகிறார். மேலும், இந்த இயற்கை பானங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, விறைப்புத் தன்மை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.