தைராய்டு பிரச்சனை? 30 நாள் காலை வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்; செம்ம ரிசல்ட் கிடைக்கும்: டாக்டர் யோக வித்யா
தைராய்டு இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்று. இதனை உணவுகள் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியும் என்றும் அதற்கான ஒரு ட்ரிங் பற்றியும் டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
தைராய்டு இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்று. இதனை உணவுகள் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியும் என்றும் அதற்கான ஒரு ட்ரிங் பற்றியும் டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
ஹைப்போ தைராய்டிசம் எனப்படும் தைராய்டு குறைவாக சுரக்கும் பிரச்சினைக்கான வீட்டு வைத்தியம் மற்றும் உணவு முறைகள் பற்றி டாக்டர். பி. யோகா வித்யா அவர்கள் எத்னிக் ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
ஹைப்போ தைராய்டிசத்திற்கான வீட்டு வைத்தியம் மற்றும் உணவு முறைகள்:
பிங்க் உப்பு: தினமும் பிங்க் உப்பு உட்கொள்ளுங்கள். பூண்டு: உங்கள் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். குடல் இயக்கம்: மலச்சிக்கல் நிலைமையை மோசமாக்கும் என்பதால், வழக்கமான குடல் இயக்கத்தை உறுதிப்படுத்தவும். மன அமைதி: உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், அமைதியாக இருக்க தியானம் செய்யவும். ஓய்வு: போதுமான ஓய்வு கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குளிர்ச்சியான உணவுகள்: குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகள் மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
தைராய்டு பிரச்சனைக்கு கற்றாழை, தயிர், இந்துப்பு மூன்றையும் ஜூஸாக அரைத்து குடித்து வரலாம். இதனால் ஹார்மோன் சமநிலை பராமரிக்கப்படும். சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தயிர் மற்றும் மோர் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.