ஈரலில் கொழுப்பு? இந்த உணவுக்கு மட்டும் 'நோ' சொல்லுங்க; ஈஸியா கரையும்: டாக்டர் யோக வித்யா டிப்ஸ்

ஈரலில் கொழுப்பு படிவதை தடுக்க சாப்பிடக்கூடாத உணவு பற்றி டாக்டர் யோகவித்யா கூறுகிறார்.

ஈரலில் கொழுப்பு படிவதை தடுக்க சாப்பிடக்கூடாத உணவு பற்றி டாக்டர் யோகவித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Fatty liver issue

மதுவைத் தவிர்த்த பிறகும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்பவர்களுக்கு டாக்டர் யோகா வித்யா, அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஆரோக்கியமான கல்லீரலைப் பேண நாம் என்ன சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறுவது பற்றி பார்ப்போம். 

Advertisment

கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய காரணங்கள்:

வெள்ளை சர்க்கரை, கருப்பட்டி மற்றும் தேன் போன்ற இனிப்புப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். அரிசி, பிரியாணி போன்ற அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு சேரும் வாய்ப்புள்ளது.

உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு போன்ற அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகளையும் தவிர்ப்பது நல்லது. பழங்களில் இயற்கையான பிரக்டோஸ் இருந்தாலும், அவற்றை முழுமையாக உட்கொள்ளும் போது, அவற்றில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. இதனால் கல்லீரலுக்குப் பாதிப்பு ஏற்படுவது குறையும்.

Advertisment
Advertisements

சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் கூட அதிக பிரக்டோஸை கல்லீரலுக்கு நேரடியாக அனுப்புகின்றன. இந்த பிரக்டோஸை கல்லீரல் கொழுப்பாக மாற்றுவதால், கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, பழச்சாறுகளைக் காட்டிலும் முழுப் பழங்களை உண்ணுவதே சிறந்தது.
 
அதேபோல இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள், இரவு 7 மணிக்கு முன்பாகவே தங்கள் இரவு உணவை முடித்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

இரவு 2 மணிக்கு பிரியாணி போன்ற கனமான உணவுகளை உட்கொள்வது கல்லீரல் சம்பந்தப்பட்ட கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, மது, சர்க்கரை மற்றும் பழச்சாறுகளைக் குறைத்து, பழங்களை முழுமையாக உட்கொண்டு, சரியான நேரத்தில் இரவு உணவை உண்பது அவசியம் என்பதை டாக்டர் யோகா வித்யா வலியுறுத்துகிறார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Health hazards of having a fatty liver

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: