எந்த ஒரு உணவாக இருந்தாலும் நன்கு மென்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என டாக்டர் யோக வித்யா கூறுகிறார். இது குறித்து அவர் எத்னிக் ஹெல்த் கேர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும். எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கலாம், எப்படி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் யோக வித்தியா கூறுவது பற்றி பார்ப்போம்.
1. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.அப்பொழுது தான் சிறுநீரக கற்கள் உருவாகாது.
2. எந்தவிதமான உணவாக இருந்தாலும் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
Advertisment
Advertisements
3. சிறுநீர் வரும்போது அதை அடக்க கூடாது. சிறுநீர் வரும்போது உடனே அதனை வெளியேற்றி விட வேண்டும். இல்லை என்றால் கிட்னியில் கல் உருவாக வாய்ப்பு உள்ளது.
4. மதியம் மூன்று மணி முதல் மாலை 7 மணி வரை அதிகம் தண்ணீர் குடித்து சிறுநீர் சென்று வந்தால் கிட்னி கல் வராமல் இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற பிரச்சனைகளும் வராது என்று மருத்துவர் யோக வித்தியா கூறுகிறார்.
5. உணவு முறைகளில் முள்ளங்கி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், வெண்பூசணி ஜூஸ், இளநீர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம் சிறுநீரக கல் குறையும்.
6. கால்சியம் கல்லாக இருந்தால் இளநீர் குடிக்க தேவையில்லை. அதுமட்டுமின்றி எந்த வகையான சிறுநீரக கல் உருவாகி இருக்கிறது என்று தெரிந்து கொண்டுதான் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.