எந்தெந்த கீரைகள் உணவுகளில் எல்லாம் செம்பு சத்து நிறைந்துள்ளதோ அவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வெண்புள்ளியை உணவு மூலமாகவே சரி செய்ய முடியும் என டாக்டர் யோக வித்யா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
தோல் மீது ஏற்படும் வெண் புள்ளி அல்லது வெள்ளை திட்டுகளே விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது. விட்டிலிகோ என்பது மெலனின் பற்றாக் குறையால் ஏற்படும் ஒரு வகை தோல் நோயாகும். அவர்கள் செம்பு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
செம்பு நிறைந்த உணவுகள்:
கோவைக்காய் புளிச்சக்கீரை தேக்கு அவுரி
Advertisment
Advertisements
எடுத்து கொள்ள கூடாத உணவுகள்
புளிப்பு உப்பு
மேற்குறிப்பிட்ட சாப்பிட கூடிய உணவுகளை தினமும் எடுத்து கொள்ளலாம். அவற்றை தினமும் எடுத்து கொள்வதன் மூலம் வெண்புள்ளிகள் ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறுகிறார்.
வெண்புள்ளி உள்ளவர்கள் புளி மற்றும் உப்பு சேர்க்கக்கூடாது. மேற்குறிப்பிட்ட கீரைகளை மிளகு, சீரகம் போட்டு எண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளலாம். வெண்புள்ளிகள் உருவாவதில் இரண்டு வகை உள்ளது. எனவே மருத்துவரை பரிசோதிப்பது அவசியம்.
அதே மாதிரி புளிப்பு தன்மையுடைய உணவுகளை தவிர்க்க வேண்டும். புளிச்ச தயிர் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார் மருத்துவர். மெலனின் சத்துக்களையும் அதிகரிக்க வேண்டும் அதற்கு வெயிலில் நிற்க வேண்டும் காலை வெயிலில் ஒரு நடை பயிற்சியும் மேற்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.