/indian-express-tamil/media/media_files/2025/03/29/NRHybGTzqnMISESeF65R.jpg)
ஆண்களுடைய விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் தரத்தை எவ்வாறு இயற்கையான முறையில் அதிகரிக்கலாம் என்று மருத்துவர் யோகவித்யா தனது யூடியூப் பக்கமான எத்னிக் ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
பெரும்பாலான ஆண்கள், தங்களுக்கு ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அதிகமாக மற்றவர்களுடன் பேசுவதில்லை. அதில் மிக முக்கியமானதாக விந்தணுக்கள் தொடர்பான பிரச்சனைகள். குறிப்பாக, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை எவ்வாறு இயற்கையான முறையில் அதிகரிக்கலாம் என்று நிறைய ஆண்களுக்கு கேள்வி இருக்கும்.
இதற்கான பதிலை மருத்துவர் யோகவித்யா கூறியிருக்கிறார். இத்தகைய பிரச்சனையை உணவு முறை மாற்றம் மூலமாக சரி செய்து விடலாம் என்று மருத்துவர் கூறுகிறார். விந்தணு உற்பத்தி அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
டிப்ஸ் 1: 20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
டிப்ஸ் 2: மலம் கட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி மலம் கட்டினால் வாதம் சரியாக வெளியே செல்லாமல் விதைப்பையில் நிறைந்து விதைப்பை வீக்கம் ஏற்படும். அதற்கு நார்ச்சத்து நிறைந்த கீரைகளை கடைந்து சாப்பிட வேண்டும்.
டிப்ஸ் 3: பசு நெய் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.
டிப்ஸ் 4: தினமும் ஒருக்கைப்பிடி அளவு நட்ஸ் மற்றும் சீட்ஸ் சாப்பிட வேண்டும்.
டிப்ஸ் 5: பீட்ரூட், மாதுளை, தர்ப்பூசணி ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வயாகராக்கு சமமாக இந்த ஜூஸ்கள் வேலை செய்யும்.
டிப்ஸ் 6: சப்போட்டா, செவ்வாழை, அவகாடோ போன்றவற்றில் மில்க் ஷேக் மாதிரி செய்து எடுத்துக் கொள்ளலாம்.
டிப்ஸ் 7: ஜாதிக்காய் தூள், கசகசா பாலில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இதோடு சுவைக்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
டிப்ஸ் 8: பருத்திப்பால் குடிக்கலாம். வாரம் ஒருமுறையாவது பருத்தி பால் குடிக்கலாம்.
இவற்றைப் பின்பற்றும் போது எரக்சன், விந்து வெளியாதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று டாக்டர் யோகவித்யா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.