முந்திரி சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுமா? உண்மையை உடைத்த டாக்டர் அருண்குமார்

முந்திரி சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என பலரும் கூறுவார்கள். அது உண்மையா முந்திரியை எப்படி சாப்பிட்டால் மாரடைப்பு வராது என டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

முந்திரி சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என பலரும் கூறுவார்கள். அது உண்மையா முந்திரியை எப்படி சாப்பிட்டால் மாரடைப்பு வராது என டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
முந்திரி அருண்குமார்

டாக்டர் அருண்குமார் அவர்கள் முந்திரி சாப்பிடுவது மாரடைப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு தனது யூடியூப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவரது கருத்துப்படி, முந்திரி சாப்பிடுவது மற்ற நட்ஸ்களை விட இது கொஞ்சம் பாதிப்பு தான். 

Advertisment

முந்திரியில் மோனோசாச்சுரேட்டட் எனப்படும் ஒரு வகை நல்ல கொழுப்பு உள்ளது. இந்த வகை கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையலாம். ஆனால் இதில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. அதனால் நல்லது அல்ல. 

முந்திரியில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், இதய தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.

எந்த உணவாக இருந்தாலும், அதை மிதமான அளவில் உட்கொள்வது நல்லது. முந்திரியிலும் கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து இருப்பதால், அதிக அளவில் சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உடல் எடை அதிகரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Advertisment
Advertisements

உப்பு சேர்க்கப்பட்ட முந்திரியை அதிகமாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே, உப்பு சேர்க்காத அல்லது குறைந்த உப்புள்ள முந்திரியை தேர்ந்தெடுப்பது நல்லது. முந்திரி சாப்பிடுவது நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் அதில் உள்ள மாவுச்சத்தினால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது என்கிறார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Cashews and its health benefits Best ways to prevent heart attack

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: