scorecardresearch

முட்டை மஞ்சள் கரு, இதயத்திற்கு ஆபத்தா? உண்மை இதுதான்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து வருகிறார்கள். இதில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நமக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று முட்டை. ஆம்லேட், கலக்கி, முட்டை கிரேவி என்று பல விதமாக முட்டையை நாம் விரும்பி சாப்பிடுவோம்.  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து வருகிறார்கள். இதில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் முட்டையின் வெள்ளை கருவைவிட மஞ்சள் கரு அதிக ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதில் அதிக புரோட்டீன் இருந்தாலும், இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் கொழுப்பு சத்து இருக்கிறது. மேலும் ஒமேகா- 3 பேட் இருக்கிறது. இதில் ரிபோபிலாவின் இருப்பதால், உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் வைட்டமின் டி சத்து இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. வைட்டமின் பி-12 இருப்பதால் சிகப்பு அனுக்கள் அதிகம் உருவாகும்.

சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு 2 மஞ்சள் கரு சாப்பிடலாம். இதுவே நீங்கள் இதய கொளாரால் பாதிக்கப்படிருந்தால், 1 மஞ்சள் கருவை சப்பிடலாம்.  மஞ்சள் கருவால், மூளை ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது. உடல் எடை குறைக்கவும், கண் தொடர்பான நோய்கள் உருவாகாமல் தடுக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Does egg yolk have fat and cholesterol