scorecardresearch

கொலஸ்ட்ரால், மாரடைப்பை தடுக்கும் மஞ்சள்: ஆய்வில் வெளியான எதிர்பார்க்காத நன்மைகள்

மஞ்சளின் நன்மைகள் பற்றி தெரிந்திருந்தாலும், கொரோனா காலத்தில்தான் அதன் நன்மைகளை கூடுதல் தெரிந்துகொண்டோம். இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், வீக்கத்திற்கு எதிரான தன்மை இருக்கிறது. இதில் இருக்கும் குர்குமின், வாழ்வியல் தொடர்பாக ஏற்படும் மோசனமான நோய்களை தடுக்கிறது.

மஞ்சள்
மஞ்சள்

மஞ்சளின் நன்மைகள் பற்றி தெரிந்திருந்தாலும், கொரோனா காலத்தில்தான் அதன் நன்மைகளை கூடுதல் தெரிந்துகொண்டோம். இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், வீக்கத்திற்கு எதிரான தன்மை இருக்கிறது. இதில் இருக்கும் குர்குமின், வாழ்வியல் தொடர்பாக ஏற்படும் மோசனமான நோய்களை தடுக்கிறது.

மேலும் வீக்கத்தை ஏற்படுத்துகிற, சி.ஆர்.பி அளவை இது கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீண்ட நாட்கள் நமது உடலில் உள்ள செல்கள் சேதமடைந்து வருகிறது. இந்நிலையில் மஞ்சளில் உள்ள குர்குமின் இந்த சேதத்தை நீக்குகிறது. குறிப்பாக நமது பேட்டி ஆசிட், புரத சத்து மற்றும் டி.என்.ஏவில் இது செயல்பட்டு செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இந்நிலையில் நமது உடலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் என்சைம் உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துகிறது.

இதய ரத்த குழாய்களின், உள்வரிகளை ஆரோக்கியமாக்குவது மூலம் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படாது. மேலும் இதுவே ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இதய ரத்த குழாய்களில், பிலேட்லட்ஸ் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அடைப்பை உருவாக்காமல் தடுக்கிறது. 121 பேரிடம் நடைபெற்ற ஆய்வில், குறிப்பாக இவர்களுக்கு, கரோனரி ஹாட்டரி பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள். இவர்களுக்கு 4 கிராம் குர்குமின் வழங்கப்பட்ட போது, மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 65 % குறைந்துள்ளது.

இந்நிலையில் மஞ்சளில் உள்ள குர்குமின் வெறும் வயிற்றில், ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. ரத்த சர்க்கரை நோய் வரும் என்று முன்பே கணிக்கப்பட்ட நபர்களிடத்தில் நடைபெற்ற ஆய்வில், அவர்களுக்கு குர்குமின் 9 மாதங்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Does mixing turmeric with black pepper help reduce bad cholesterol prevent heart attack risk