scorecardresearch

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்  சோயா பீன் புரோட்டின்: உங்கள் உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது ?   

மாதவிடாய் நின்றுபோன பெண்களுக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க சோயா பால் உதவுகிறது. இதில் இருக்கும் ஐசோபிலவினோன்ஸ் சிறிய ஈஸ்டோஜென் போல் செயல்படும். மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்  சோயா பீன் புரோட்டின்: உங்கள் உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது ?   

சோயாவை அடிப்படையாக கொண்ட உணவுகளை சாப்பிடும்போது, ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அது கட்டுப்படுத்துகிறது. சோயாவில் உள்ள ஒரு வகை புரோட்டின் சத்து, நமது கல்லீரலில் உற்பத்தி செய்யும் கெட்ட கொல்ஸ்ட்ராலை தடுக்கிறது.

இதுமட்டுமில்லாமல் சோயா பீன்ஸ் பலவித நோய்களை தடுக்கிறது. இதயத்தின் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய்கள்,பக்கவாதம், சில வகை புற்று நோய் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை காபாற்றுகிறது.

சோயா உணவுகளால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய குழாய்களின் விரியும் தன்மையை அதிகப்படுத்துகிறது. எலும்பு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.  மார்பக புற்றுநோய் உள்ளபட மற்ற புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. பார்க்கும் திறன் மற்றும் யோசிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

சோயா பீன்ஸில் ஐசோபிலவினோன்ஸ் சத்து இருப்பதால் நமக்கு இந்த அரோக்கியம் கிடைக்கிறது. இது சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால், டோஃபு, சோயா யோகட், சோயா பிரட், சோயா சாஸ்ஸில் கிடைக்கிறது.

சோயா பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் இருக்கிறது.  மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட். மேலும் இதில் இருக்கும் பொட்டஷியம், ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. மேலும் அதிக கொல்ஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

மாதவிடாய் நின்றுபோன பெண்களுக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க சோயா பால் உதவுகிறது. இதில் இருக்கும் ஐசோபிலவினோன்ஸ் சிறிய ஈஸ்டோஜென் போல் செயல்படும். மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Does soybean protein help lower cholesterol