இந்திய உணவுப் பொருள்களில் துவரம் பருப்பு முக்கிய இடம் வகிக்கிறது. தென் இந்திய சமையலில் பருப்பு குழம்பு மற்றும் சாம்பார் எனவும் மராட்டியத்தில் வரன் எனவும் குஜராத்தில் தால் தோக்லி எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் துவரம் பருப்பு பாலை விட 6 மடங்கு சக்தி வாய்ந்தது. இந்திய கலாசாரத்தோடு நீண்ட கால தொடர்புடைய இந்தப் பருப்புகள், 2020ஆம் ஆண்டு நிலவரப்படி உலக உற்பத்தியில் 77 சதவீதம் இந்தியர்களால் மட்டுமே நுகரப்படுகின்றன.
Advertisment
மேலும் துவரை அல்லது துவாரி பருப்பு என்ற வார்த்தை கி.பி. 300 முதல் கி.பி., 400 ஆம் ஆண்டு காலத்தை சேர்ந்த கதாதப்சதி என்ற நூலிலும் காணப்படுகின்றன.
இந்தப் பருப்புகள் ஊட்டச்சத்து களஞ்சியமாக காணப்படுகின்றன. அதாவது 100 கிராம் துவரையம் பருப்பில் 652 மி.கி., கால்சியம் உள்ளது. அதுவே பாலில் 120 மி.கி., கால்சியம் மட்டுமே உள்ளது. அதாவது பாலை விட துவரம் பருப்பில் 6 மடங்கு கால்சியம் நிறைந்துள்ளது.
இது குறித்து பேசிய கர்நாடகாவில் உள்ள கல்புர்கி ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் முனிசாமி, “தெற்கு கர்நாடகாவில் பயிரிடப்படும் பருப்பில் கால்சியம் உள்பட பல்வேறு சக்திகள் காணப்படுகின்றன என்றார். இந்தப் பருப்பில் உள்ள தோல் எளிதில் ஜீரணமாகாது. ஆகையால் பருப்பில் இருந்து தோல் நீக்கப்படுகிறது. பருப்பில் இருந்து தோலை நீக்குவதும் அவ்வளவு எளிதான வேலை இல்லை.
இதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் மற்றொரு ஆராய்ச்சியாளர் குல்தீப் சிங், “துவரம் பருப்பில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. இதை முழுமையாக பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதுவரை துவரம் பருப்பை பருப்பு சாதமாகவோ, சாம்பார் ஆகவோ அல்லது பருப்பு குழம்பு ஆகவோ சாப்பிட்டு வாருங்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“