நாம் சமைக்கும் உணவை அடுத்த நாள் சூடு செய்து சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகும். சூடு செய்த சாப்பாடு சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும் என்றும் சிலர் அதிகம் சாப்பிடுகின்றனர். கடைகளில் கூட பழைய சாதம் என்று மெனு கார்டில் ஒரு ஐடம் உள்ளது. சில கடைகளில் கூட பழைய சாதம் சாப்பிடுவதை சூடு செய்து கொடுப்பது நன்றாக இருப்பதாக கூறி வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட உணவுகளை அதாவது சூடு செய்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் பிள்ளை பரிந்துரைக்கிறார். ஏனென்றால் அது விஷமாகிவிடுமாம். இது குறித்து அவர் கூறுவது பற்றி பார்ப்போம்.
பொதுவாக உடனடியாக சமைத்த உணவுகளை சாப்பிடுவதுதான் சிறந்தது. இந்நிலையில் சில உணவுகளை நாம் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதனால் உணவு விஷமாக மாறி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர் பிள்ளை கூறுகிறார்.
சிக்கன்: சிக்கனில் அதிகபடியான புரத சத்து உள்ளது. சிக்கனை சாப்பிட்டால் அது செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதை இரண்டாவது முறை சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. மேலும் எல்லா வகை இறைச்சி உணவுகளையும் சூடுபடுத்தி சாப்பிடாமல் இருப்பது நல்லது.
இந்த உணவை திரும்ப சூடு படுத்தினால் விஷமாகும்! ஆபத்து! உஷார்! | DO NOT HEAT THESE FOODS | Dr.Pillai
கீரை: கீரையில் அதிக வகையான நைட்ரேட் மற்றும் இரும்பு சத்து இருக்கிறது. எனவே கீரை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் குடல் புற்றுநோய் ஏற்படும். மேலும் இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
முட்டை: முட்டையை நாம் சூடுபடுத்தி சாப்பிடும்போது, அதன் புரதங்கள் அழிந்துவிடும். இது நச்சுத்தன்மையாக மாறிவிடும். அஜீரணம் மற்றும் ஜீரண மண்டலத்தில் வழித்தடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுபோல சாதத்தையும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது. மேலும் காளான் சமைத்ததையும் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.