அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு நிறைய ஆற்றலை தருவதோடு வேகவைக்காமல் மரவள்ளிக்கிழங்கு, சாப்பிடக்கூடாது எனவும் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மரவள்ளிக்கிழங்கை ஊறவைத்து வேகவைத்து தான் சாப்பிட வேண்டும். மரவள்ளி கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டால் நன்மை கிடையாது என டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். மரவள்ளிக்கிழங்கு வேகவைக்காமல் சாப்பிட கூடாது. பச்சை கிழங்கில் சயனைடு உள்ளது.
மரவள்ளிக்கிழங்கு குடலில் இருக்க கூடிய நல்ல கிருமிகளுக்கு உணவாக இருக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு நன்மை அளிக்கும். கண் பார்வை மேம்படும்.
மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் போலேட் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள நார்ச்சத்து உதல் எடையை குறைக்க உதவும். கெட்ட கொழுப்புகள் குறைக்கும் மேலும் பயின்மையை போக்கும். பசியைத் தூண்டாது அதனால் அதிக உணவு சாப்பிட வேண்டிய தேவை இருக்காது.
6 நன்மைகள் கொண்ட சூப்பர் கிழங்கு இது !?
இதனை குழந்தைகளுக்கு வேகவைத்து கொடுக்கலாம். மூளை வளர்ச்சிக்கு நல்லது. ஆரோக்கியம் மற்றும் ஞாபகசக்தியை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கோளாறு, பக்கவாதம் மற்றும் நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது என மருத்துவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.