காய்கறி இல்லையா? கவலை வேண்டாம்… கேரளா ஸ்டைல் தம்புளி இப்படி செய்து சாப்பிடுங்க!

தக்காளியை வைத்து பலவிதமான சட்னி, தொக்கு, ஊறுகாய், சாதம் என சமைப்பதுண்டு. அதில் ஒன்றுதான் கேரளா ஸ்டைலில் தம்புளி. இந்தப் பதிவில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.!

தக்காளியை வைத்து பலவிதமான சட்னி, தொக்கு, ஊறுகாய், சாதம் என சமைப்பதுண்டு. அதில் ஒன்றுதான் கேரளா ஸ்டைலில் தம்புளி. இந்தப் பதிவில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.!

author-image
WebDesk
New Update
Kerala style Dhambuli

காய்கறி இல்லையா? கவலை வேண்டாம்… கேரளா ஸ்டைல் தம்புளி இப்படி செய்து சாப்பிடுங்க!

வீட்டில் நாம் எப்போதும் வைப்பதுபோல் தக்காளி குழம்பு வைத்து போர் அடிக்கிறதா? அப்படியானால் கேரளா ஸ்டைலில் தம்புளி ஒருமுறை வைத்துப் பாருங்கள். பொதுவாகவே இந்திய உணவுகளில் அதிகப்படியான தக்காளி பயன்பாடு இருக்கிறது. இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இரண்டு சுவையையும் தக்காளி கொண்டிருப்பதால் அவற்றை நமது உணவில் சேர்க்கும்போது, மேலும் சுவையை கூட்டித் தருகிறது. இந்த தக்காளியை வைத்து பலவிதமான சட்னி, தொக்கு, ஊறுகாய், சாதம் என சமைப்பதுண்டு. அதில் ஒன்றுதான் கேரளா ஸ்டைலில் தம்புளி.

Advertisment

தேவையான பொருட்கள்: 

தக்காளி - 2, வெங்காயம் - 2, மிளகாய் தூள் - 1 ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கருவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, கடுகு - 1 ஸ்பூன், புளிப்பில்லாத தயிர், எண்ணெய், வெந்தயம், சீரகம்(கால் டேபிஸ்பூன்)

செய்முறை: 

Advertisment
Advertisements

முதலில் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம், சீரகம் சேர்த்து நன்றாக பொரிய விடவும். அடுத்ததாக பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்கு குலைய வதக்கவும். அதில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கிளற விட்டு, அதனை ஒரு கின்னத்தில் மாற்றிவிட்டு ஆற விட வேண்டும். அடுத்து, புளிப்பில்லாத தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைத்துள்ள தக்காளியை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்சியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். அதனை கரைத்து வைத்துள்ள தயிருடன் சேர்த்து, உப்பு சேர்த்து கிளற வேண்டும். இதனுடன், கடுகு, சீரகம், பட்ட மிளகாய் தாளித்து ஊற்ற வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைலில் தம்புளி ரெடி..!

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: