/indian-express-tamil/media/media_files/2025/03/02/GE9TMv7HuEnr4nGnacsk.jpg)
டீ உடன் சேர்த்து சாப்பிட கூடாதவை
டீ என்பது பொதுவாக காலையில் எல்லோரும் குடிக்க கூடிய ஒன்றாகும். அதோடு சேர்த்து சிலர் பிஸ்கட் சாப்பிடும் பழக்கமும் உள்ளது. ஆனால் அப்படி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா? இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டீ குடிக்கும் போது என்னென்ன சாப்பிடலாம் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.
சாப்பிடக்கூடாத உணவுகள்:
- பிஸ்கட் - குடல் அழற்சி, செரிமான கோளாறுகள் ஏற்படும். மேலும் உடல் எடை அதிகரிக்கும். முகத்தில் சீமன் அதிகமாக சுரக்கும். இதனால் முகப்பருக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
- எலுமிச்சை - அதுவும் லெமன் டீ சாப்பிடகூடாது. டீயில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இரண்டு சேர்வதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.
- கடலை மாவு - பக்கோடா, முறுக்கு, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் சேர்த்து சாப்பிட கூடாது.
- மஞ்சள் - வாய்வுத்தொல்லை, வயிறு எரிச்சல் ஏற்படும்
- இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட கூடாது.
- அசைவம் அறவே தவிர்க்க வேண்டும்
- கொண்டை கடலை போன்ற தானிய வகைகள் சாப்பிட கூடாது
- பாதம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் சாப்பிட கூடாது
- அதேபோல சூடான டீயுடன் குளிர்ச்சியான எதுவும் சேர்த்து சாப்பிட கூடாது
டீயுடன் சேர்க்க கூடியவை:
டீ உடன் கண்டிப்பாக இதை சாப்பிடாதீர்கள் | 8 foods to avoid with tea
இஞ்சி, சர்க்கரை, ஏலக்காய், பட்டை, துளசி இவற்றை சேர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.