ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்களுக்கு என்னதான் சிகிச்சை முறைகள் மேற்கொண்டாலும் சில நேரங்களில் முழுமையாக பலனளிப்பதில்லை. இதற்கு உண்ணும் உணவும் காரணம். அதாவது தலைவலி வரும்போது உண்ணும் உணவின் தூண்டுதலும் ஒரு காரணம் ஆக இருக்கும்.
சாதாரண தலைவலியை போல இந்த ஒற்றைத் தலைவலி இருக்காது. அப்படிப்பட்ட ஒற்றை தலைவலி வரும்போது செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றி மருத்துவர் ஷர்மிகா டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ஒற்றைத்தலைவலி என்பது நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். ஆதலால் ஒற்றைத்தலைவலி வரும்போது சாப்பிடும் உணவில் கவனம் தேவை. ஒற்றைத்தலைவலி வரும்போது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடம்பை ஹட்ரேட்டாக வைத்து கொள்வது அவசியம்.
Best and worst food for MIGRANE #cure #astrology #daisyhospital #abcjuice #tamil #fruitdrink
அடுத்தது டீ, காபி குடிக்க கூடாது. அது வலியை மேலும் அதிகரிக்கும். கஃபைன் என்ற மூலப்பொருள் தலைவலியை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் இந்த காபி போன்ற பானங்களை அருந்தும்போது அது அந்த தலைவலியின் தீவிரத்தை அதிகரிக்க செய்யும்.
அதேபோல கடைகளில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.