இட்லி நமக்குப் பிடித்த மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்று. ஆனால், இட்லி மாவு புளித்து விட்டால், அது வீணாகி விடும். மாவில் 2-3 டம்ளர் தண்ணீர்விட்டு சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நீர் மேலே தெளிந்து நிற்கும். அதை வடித்துவிட்டால் புளிப்பு போய்விடும்.
Advertisment
அதேபோல புளித்த இட்லி மாவை புதிதாக மாற்ற ஒரு சிம்பிள் வழி இங்கே உள்ளது.
என்ன தேவை
கடலை மாவு -1 ½ தேக்கரண்டி
சர்க்கரை – ½ தேக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
எப்படி செய்வது?
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, வெண்ணெய், சர்க்கரை மூன்றையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். புளித்த மாவுடன் இந்த பேஸ்டை சேர்த்து, நன்கு கலக்கவும். மாவில் உள்ள புளிப்பு நீங்கி, புதிது போல ஆகிவிடும்.
இப்போது தோசை ஊற்றி பாருங்கள். மாவு கொஞ்சம் கூட புளிக்காது. ருசியாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“