தோசைக் கல் மேல கொஞ்சம் உப்பு, புளி... இனி மொறு மொறுன்னு வர இந்த டிப்ஸ் கேரண்டி; ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் பாடாய் படுத்தும் அனுபவம் உங்களுக்கும் உண்டா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே இதோ சில எளிய ஆனால் பயனுள்ள ரகசியங்கள்!

தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் பாடாய் படுத்தும் அனுபவம் உங்களுக்கும் உண்டா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே இதோ சில எளிய ஆனால் பயனுள்ள ரகசியங்கள்!

author-image
WebDesk
New Update
dosa

Dosa tawa seasoning crispy dosa tips

தோசைக் கல் மேல கொஞ்சம் உப்பு, புளி... இனி மொறு மொறுன்னு வர இந்த டிப்ஸ் கேரண்டி; ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

Advertisment

தென்னிந்தியர்களின் விருப்பமான காலை உணவு எதுவென்று கேட்டால், சட்டென்று வருவது தோசை தான். காலை மட்டுமல்ல, இரவு உணவிலும் தோசைக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால், பலருக்கு இந்த எளிய தோசையை சுடுவது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருக்கிறது.

தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் பாடாய் படுத்தும் அனுபவம் உங்களுக்கும் உண்டா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே இதோ சில எளிய ஆனால் பயனுள்ள ரகசியங்கள்!

Advertisment
Advertisements

தோசை சுடுவதில், தவாவின் சரியான வெப்பநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தவா மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். தீயை எப்பொழுதும் மிதமாக வைத்து, தோசை மாவை ஊற்றவும்

சீசனிங் செய்யாத இரும்பு தவாவில் தோசை சுடுவது தவறு, இரும்பு தவாவை சீசனிங் செய்வது மிகவும் முக்கியம், மேலும் வெங்காயம் மற்றும் சிறிது எண்ணெய் பயன்படுத்தி நன்கு சீசனிங் செய்யலாம்.

மிகவும் திக்கான அல்லது தண்ணீர் போல இருக்கும் மாவை தவிர்க்கவும்.

தோசை மாவு மீடியம் திக்னெஸ் ஆக இருக்க வேண்டும், மேலும் தோசை சுடுவதற்கு முன்பு அதை ஃபிரிட்ஜில் இருந்து சிறிது நேரம் அறைவெப்ப நிலையில் வைப்பது மிகவும் முக்கியம்.

தோசை மாவு புளிக்க விடுவது முக்கியம், அப்போதுதான் சரியான சுவை மற்றும் அமைப்பு கிடைக்கும். மாவு அரைத்த உடனேயே பயன்படுத்துவது உங்களுக்கு சரியான தோசையைத் தராது

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: