கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் கொத்து தோசை சாப்பிட்டு இருக்கிறீர்களா? சிறகடிக்க ஆசை சீரியலில் சொன்ன மாதிரி கொத்து தோசை எப்படி செய்வது என்று சக்கரசாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியதாவது,
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தோசை
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
கரம் மசாலா
மல்லித்தூள்
மிளகாய் தூள்
முட்டை
கொத்தமல்லி தழை
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை இவை அனைத்தையும் நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, முட்டை போட்டு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து அதில் ரெடியாக சுட்டு வைத்துள்ள தோசையை கிழித்து போட்டு கலந்து கொத்து போடவும். நன்கு மசாலாக்களுடன் தோசை கலந்ததும் மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் தோசை கொத்து ரெடி ஆகிவிடும்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்பெஷல் கொத்து தோசை
இனி தோசை சாப்பிட பிடிக்காத உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இந்த மாதிரி கொத்து தோசை செய்து கொடுங்கள்.