இட்லி மட்டும் இல்ல தோசையிலும் செய்யலாம் உப்புமா! சிம்பிள் ரெசிபி இங்கே!

தோசையை சிறிய துண்டுகளாக எடுத்து மசாலா செய்து அதனுடன் சேர்த்தால் சுவையான தோசை உப்புமா ரெடி.

தோசையை சிறிய துண்டுகளாக எடுத்து மசாலா செய்து அதனுடன் சேர்த்தால் சுவையான தோசை உப்புமா ரெடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Upma

Food

தோசை உப்புமா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கல் தோசை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

தாளிக்க

Advertisment
Advertisements

கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் கல் தோசையை சிறிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இவையனைத்தும் நன்றாக வதங்கியதும், பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். நாம் சேர்த்துள்ள தோசை மசாலாவுடன் நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கவும். இப்போது சூப்பரான தோசை உப்புமா தயார். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து சுவைக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: